கொவிட் முடிவுக்கு வருகிறது – WHO எதிர்பார்ப்பு

4 years ago
World
(162 views)
aivarree.com

கொவிட் தொற்றுநோய் பரவலின் கடுமையான தாக்கம் இந்த ஆண்டு நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பிரதானி டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயெசஸ் தென்னாப்பிரிக்காவில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

இந்த வருடம் மையப்பகுதியுடன் கொவிட் பெருந்தொற்றின் கடுமையான தாக்கம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 70 சதவீதமான உலக மக்கள் தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டாலே இது சாத்தியப்படும் என்று அவர் கூறியுள்ளார்.