கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ – வத்தேமுல்ல என்ற பகுதியில் அல்-கைடா என்ற பெயரில் இயங்கிய குழு ஒன்று குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குழு தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவர் திங்களன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
ஊர் மக்களை அச்சுறுத்தி, கட்டுப்படுத்தி பல அடிப்படைவாத செயற்பாடுகளில் இந்த குழு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நீண்டகாலமாக இந்த குழு இயங்கி வந்துள்ள போதும், அச்சம் காரணமாக இதுவரையில் ஊர் மக்கள் இதுகுறித்த விபரங்களை காவல்துறைக்கு வழங்கி இருக்கவில்லை.
தற்போது இந்த குழுவின் பிரதானி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாக காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் கைப்பேசிகளில் பெற்றுக்கொள்ள, எமது வட்சப் குழுவில் இணையுங்கள். (Link கீழே)
