மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி இந்திய அணியின் 1000ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகும்.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலளித்து ஆடிய இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கட்டுகளை 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
ஆட்டநாயகனாக 49 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்திய யூஸ்வேந்தர் சஹால் தெரிவுசெய்யப்பட்டார்.
