கனடாவில் தொழில் தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது

5 years ago
tamilnewsline.com

கனடாவில் மற்றும் ஏனைய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் பறித்த ஒருவர் பாணந்துறையில் கைதானார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

அவருக்கு எதிராக 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவர் சுமார் 50 லட்சம் ரூபா வரையில் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.