ஓய்வு பெரும் நோக்கம் இல்லை/ரித்திமான் சாகா

4 years ago
SPORTS
(46 views)
aivarree.com

பல கிரிக்கட் போட்டிகளில் தவிர்க்கப்பட்டுள்ள போதிலும் தான் ஓய்வுபெற போவதில்லை என ரித்திமான் சாகா கூறியுள்ளார்.

எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகும் இலங்கை- இந்தியா டெஸ்ட் தொடருக்கு அவர் தெரிவு செய்யப்படவில்லை.

ரஞ்சி போட்டிகளிலும் அவர் தொடர்பில் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கட் சபை கூறியுள்ளது.

இந்நிலையில் ரித்திமான் சாகா ஓய்வுபெற கூடும் என ஊகிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நோக்கம் இல்லை என ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Reported by
Editorial Reporter