எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.
எனினும் அந்த கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரையில் பதிலளிக்கவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையால், பெற்றோலிய கூட்டுத்தபனத்துக்கு நட்டம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான யோசனை திட்ட வரைவு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
