எரிபொருள் வாங்க காசில்லை / மாதம் 2 மில்லியன் ரூபா சம்பளத்துக்கு இருவரை இணைத்தது CEB

5 years ago
tamilnewsline.com

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி சுசந்த பெரேரா மற்றும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஆகியோரை ஆலோசகர்களாக நியமிக்க இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

அவர்களுக்கு இலங்கை மின்சார சபை மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் செலுத்தவுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சம்பளத்துக்கு மேல் போக்குவரத்து வசதிகள் மற்றும் ஓட்டுநர்கள், தொழில்துறை மற்றும் செயலக ஊழியர்களுடன் அலுவலக இடம் ஆகியவற்றைப் பெறுவார்கள்.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டமைக்கான கட்டணமாக பல மில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சாரசபை இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சண்டேடைம்ஸ் பத்திரிகையின் உட்கிடக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.