உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் உறவினர்களை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற ஊழியர்கள் வெளியேறுவதற்கு வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியுள்ளதுடன் உக்ரைனில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ள போதும் ரஷ்யா அதனை மறுத்துள்ளது.
தற்போதைய பதற்ற நிலை ‘அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்கான சாத்தியக்கூறுகள்’ இருப்பதால் மக்கள் ரஷ்யாவிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
