உக்ரைனின் 2 பகுதிகளை தனி குடியரசுகளாக அங்கீகரித்தார் புட்டின்

4 years ago
World
(57 views)
aivarree.com

உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினை வாதிகள் வசிக்கும் கிழக்கு பிரதேசத்தை, 2 தனித்தனி குடியரசுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிரதேசங்கள் சுதந்திரம் பெற்ற குடியரசுகள் என அவர் அங்கீகரித்து அறிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பு ஒன்றில் ரஷ்ய அதிபர் இந்த விபரத்தை வழங்கினார்.

“உக்ரைன், ரஷ்ய வராலாற்றில் ஒரு முக்கிய பங்காகும் – விரோதத்தை நிறுத்தாவிட்டால், அதுவே பொறுப்பாளியாகும்” எனவும் புட்டின் எச்சரித்துள்ளார்.