சிறிலங்க பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல கொவிட் தொற்றுக்குள்ளானார்.
இதன் மூலம் கொவிடால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அகில எல்லாவல தெரிவித்தார்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
#லங்காதீப
