இந்தியாவில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
எனினும் கடந்த ஆண்டே இந்தியா இந்த எண்ணிக்கையை அண்மித்துள்ளதாகவும் தவறான ஆய்வுகள் காரணமாக அவை மறைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த மில்லியன் கணக்கானவர்கள் தரவில் சேர்க்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் நான்காவது அதிக கொவிட் உயிரிழப்புக்களை கொண்ட நாடாக காணப்படும் இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் 4 லட்சம் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.
