அருந்திக பெர்ணாண்டோவும் அமைச்சராகிறார்

4 years ago
Sri Lanka
(32 views)
aivarree.com

அண்மையில் ராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய அருந்திக பெர்ணாண்டோ மீண்டும் அந்த பதவியில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், அவரது மகனும் தொடர்பு பட்டிருந்தார்.

இதனை அடுத்து அவர் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அமைச்சரவை உபகுழு ஒன்று விசாரணை நடத்தி, அருந்திக பெர்ணாண்டோ குற்றமற்றவர் என ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் அவர் மீண்டும் அந்த பதவியில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.