அத்தாவுல்லா அரசாங்கத்தில் இருந்து விலகுகிறாரா? அய்வரிக்கு சொன்னது என்ன?

4 years ago
Sri Lanka
(145 views)
aivarree.com

விமல் வீரவன்ச உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.

அவர்களுடன் தேசிய காங்கிரசின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் A.L.M. அத்தாவுல்லா இணைந்துகொள்ள தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது சம்பந்தமாக அத்தாவுல்லா MPயை அய்வரி செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது சம்பந்தமான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னரே இது சம்பந்தமாக உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியும் எனவும் அத்தாவுல்லா அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.