அணு உலைகளைத் தாக்கும் ரஷ்யா – 10 செய்தித்துளிகள்

4 years ago
World
(68 views)
aivarree.com

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், ரஷ்யா அணு உலைகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.


தற்போதைய சூழ்நிலைகளின் பிந்திய தகவல்கள் செய்தித்துளிகள் வடிவில் தரப்பட்டுள்ளன.


  • ரஷ்ய அதிபர் புட்டினும் தாமும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதே உக்ரைன் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  • ரஷ்யா – உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, யுத்த பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கான பாதையை அனுமதிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. 

  • இதுவரையில் ஒரு நகரத்தை மாத்திரமே ரஷ்யா கைப்பற்றி இருந்தாலும், திட்டமிட்டபடியே யுத்தம் நகர்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். 

  • உக்ரைனின் தெற்கு துறைமுக நகரான மாரியுபோல் மீது ரஷ்யா கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அங்குப் பொதுமக்கள் பலர் சிக்கியுள்ளனர். 

  • இன்னும் சில தெற்கு நகரங்களை ரஷ்யா கைப்பற்றுமாக இருந்தால், உக்ரைனுக்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான கடல்வழி தொடர்புகள் இல்லாமல் போய்விடும். 

  • தலைநகர் கியவ் இன்னும் உக்ரைன் அரச கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது – ஆனால் மிகப்பெரிய ரஷ்ய இராணுவ படையணி ஒன்று கியவ் நோக்கி நகர்த்தப்படுகிறது. 

  • ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி மையமான சீப்ரிசியோ மீது ரஷ்யா கடுமையான ஷெல் வீச்சுகளை நடத்தியுள்ளது – இதுதொடர்பாக உலக அணுசக்தி முகவர் நிலையம் பெரும் கரிசனையை வெளியிட்டுள்ளது. 

  • மேலும் இரண்டு ரஷ்ய ஒலிகர்ஸ் என்று சொல்லப்படுகின்ற தன்னலக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடை. 

  • 2014ம் ஆண்டு ரஷ்யா க்ரைமியாவை ஆக்கிரமித்த போது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஒருவர் அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். 

  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது, ரஷ்யாவின் திட்டத்தின் படி நடக்கவில்லை என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் பென் வெல்லஸ் தெரிவித்துள்ளார். 

செய்தித்துளிகள் வடிவல் ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தை அறிந்து கொள்ளவும் மேலதிக உடனடி செய்திகளுக்கும் கீழுள்ள link ஐ தொட்டு எமது வட்சப்குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.