வத்தளை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர் கைது

3 hours ago
Sri Lanka
(3 views)
aivarree.com

வத்தளை, கதிரான பகுதியில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின்போது ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.