புதிய வரி சீர்த்திருத்தங்களை அறிவித்தது இறைவரித் திணைக்களம்

2 months ago
(143 views)
aivarree.com

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2026 ஆம் ஆண்டின் இல. 11 ஆம் உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு வரிச் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.

முக்கிய மாற்றங்களாக, தனிப்பட்ட மோட்டார் வாகனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் இலாபங்களுக்கான வரி விலக்குகள், தொழில்முறை சேவைக் கட்டணங்களுக்கான 5சதவீத வரிப் பிடித்தம் விரிவுபடுத்தப்படுதல், திருத்தப்பட்ட மூலதன ஈட்ட வரி விகிதங்கள், குறிப்பிட்ட சம்பளதாரர் ஊழியர்களுக்கான நிவாரணம், பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான புதிய வரி அடையாள எண் (வுஐN) தேவைகள், மற்றும் இணங்காதமைக்கான கடுமையான அபராதங்கள் ஆகியவை அடங்கும்.

மேலும், இந்தத் திருத்தங்கள் அரசாங்க நன்கொடைகளுக்கான வரி நிவாரணம், திருத்தப்பட்ட வரி குடியிருப்பு விதிகள், மற்றும் 2026 டிசம்பர் 02 ஆம் திகதிக்குள் செலுத்தப்படும் நிலுவை வரிப் பொறுப்புகளுக்கான வட்டி தள்ளுபடி ஆகியவற்றையும் அறிமுகப்படுத்துகின்றன.