tamilnewsline

அமெரிக்கா தாக்குதலை நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் – ஈரான் எச்சரிக்கை

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா அடுத்தக் கட்டத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், பிராந்தியத்திலுள்ள ஏனைய வர்த்தகப் பாதைகளையும் முடக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா தனது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

அத்துடன், பிராந்தியத்திலுள்ள ஏனைய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிப் பாதைகளையும் முடக்குவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் இராணுவ பலத்தைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் ஈரானிய இலக்குகள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மூலமாகப் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையிலேயே ஈரானிடமிருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version