tamilnewsline

தென்னாப்பிரிக்க சர்வதேச கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார்

தென்னாப்பிரிக்க சர்வதேச கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார்

தென்னாப்பிரிக்க சர்வதேச கால்பந்து அணி வீரரான 25 வயதுடைய ஜெய்டன் ஆடம்ஸ் (Jayden Adams) காலமானதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இன்று காலை கேப் டவுனின் மத்திய பகுதியில் உள்ள வீட்டில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நடைபெற்று வரும் FIFA உலகக் கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்கா சார்பாக விளையாடிய ஆடம்ஸ், குழு நிலைப்போட்டிகள் மூன்றிலும் பங்கேற்றிருந்தார்.

எனினும், கனடா அணிக்கு எதிரான 16 சிறந்த அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் அவர் விளையாடவில்லை.

கேப் டவுனில் பிறந்த ஆடம்ஸ், தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை ‘ஸ்டெல்லன்பொஷ் எப்சி’ அணியுடன் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version