tamilnewsline

வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், காயமடைந்தவரின் அடையாளம் அல்லது இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணியைக் கண்டறிவதற்கும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும்.

இதற்கு முன்னர் தெமட்டகொட பகுதியிலும் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

Exit mobile version