செந்தில் தொண்டமான் விபத்து வழக்கு: ஒக்டோபர் 13 வரை ஒத்திவைப்பு

3 hours ago
Sri Lanka
(4 views)
aivarree.com

பண்டாரவளையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற, செந்தில் தொண்டமான் தொடர்புடையதாக கூறப்படும் விபத்து தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கு தொடர்பான விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக் தொடர்பான விசாரணையை ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி, ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பண்டாரவளையில் இந்த விபத்து இடம் பெற்றது.

இதன்போது செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், ஆதரவாளர்கள் குழுவினருக்குள் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், விபத்துக்கான காரணம் தொடர்பாக விரிவான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. சம்பவத்தின் CCTV காட்சிகளும் அப்போது வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்திருந்தன.