tamilnewsline

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சோற்றுப் பொதி, கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளன.

அத்துடன், தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றூண்டி வகைகளின் விலைகளும் 5 ரூபாயினால் குறைக்கப்படுவதாக சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version