லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை குறைப்பு

4 hours ago
Sri Lanka
(4 views)
aivarree.com

லிட்ரோ நிறுவனத்தைத் தொடர்ந்து, லாஃப்ஸ் நிறுவனமும் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திருத்தப்பட்ட புதிய விலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 1,280 ரூபாய் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 4,965 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 512 ரூபாய் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,988 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரு நிறுவனங்களினதும் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை நுகர்வோருக்குப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.