tamilnewsline

சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கும், சிறைச்சாலை அத்தியட்சகர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, தற்போதைய சிறைச்சாலை அமைப்பில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாக தங்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தமக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிட்ட அதிகாரிகள், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஜனாதிபதிக்குத் தமது நன்றியையும் தெரிவித்தனர்.

Exit mobile version