இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா, 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக யாழ்ப்பாண அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் யாழ்ப்பாண அணிக்குக் கூடுதல் பலத்தை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுபவமிக்க சிறந்த பந்து வீச்சாளரான இவர் , 2007 ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் மற்றும் 2011 ஐ.சி.சி உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிகளிலும் இடம்பிடித்திருந்தார்.
இந்த முறை எல்.பி.எல். தொடருக்காக அணிகள் தங்களை வலுப்படுத்தி வரும் நிலையில், பல சர்வதேச மற்றும் உள்நாட்டு நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
