tamilnewsline

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னால் இராஜங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐந்து பேரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசதுரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Exit mobile version