tamilnewsline

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது

காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Exit mobile version