tamilnewsline

கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிறைவு செய்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க அனுமதி வழங்கப்படுமா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து எழுத்துமூல சமர்ப்பிப்புகளும் ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version