பேருந்துக் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம்

2 months ago
tamilnewsline.com

பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) முன்னெடுத்து வரும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள், பேருந்து சேவைகளின் தரத்தை உயர்த்தவும், பயணிகளுக்கான அசௌகரியங்களைக் குறைத்து வசதிகளை மேம்படுத்தவும், அதேவேளை தனியார் துறையுடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுப் போக்குவரத்துச் சேவையை மறுசீரமைத்து, பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நவீன கட்டணச் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.