இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, திருத்தப்பட்ட புதிய விலைகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 300 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,465 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 118 ரூபாய் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,792 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2.3 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 55 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 835 ரூபாவாகும்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைந்தமைக்கு இணங்க, உள்நாட்டு விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
