tamilnewsline

LIOC இடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யத் தீர்மானம்  

இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திடம் (LIOC) இருந்து அரசாங்கம்டீசலை கொள்வனவு செய்யவுள்ளது. 

இதற்காக அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவைஅனுமதி கிடைத்துள்ளது. 

இதன்படி 40,000 மெட்றிக் டன் டீசல் லங்கா ஐஓசியிடம் இருந்து கொள்வனவுசெய்யப்படவுள்ளது.

மேலும் 40,000 மெட்றிக் டன் பெற்றலை அந்த நிறுவனத்திடம் இருந்துகொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

டொலர் தட்டுப்பாட்டால் இறக்குமதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில்இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version