லலித் – குகன் காணாமற்போன வழக்கு: கோட்டாபய ராஜபக்ச காணொளி வழியாக சாட்சியமளிக்க நீதிமன்ற உத்தரவு

3 hours ago
Sri Lanka
(5 views)
aivarree.com

2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி வழியாக சாட்சியமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில், காணொளி இணைப்பு (Video Conference) ஊடாக அவர் சாட்சியமளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.