Aivarree

IPL ஏலம் – 590 வீரர்களின் பட்டியல் வெளியானது

IPL

இந்த மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள IPL ஏலத்துக்கான 44 புதியவர்களுடன், 590 வீரர்களை உள்ளடக்கிய இறுதிப் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் செவ்வாயன்று வெளியிட்டது.


டேவிட் வார்னர், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், பெட் கம்மின்ஸ், குயின்டன் டி கொக், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ககிசோ ரபாடா, ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் IPL மார்க்யூ குழுவில் உள்ளனர்.


இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மார்ச் 27 ஆம் திகதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) மகாராஷ்டிராவில் வான்கடே அரங்கு, பிரபோர்ன் அரங்கு, டிஒய் பட்டீல் அரங்கு மற்றும் கஹுஞ்சேவில் உள்ள எம்.சீ.ஏ. அரங்கு என்பவற்றில் இந்த போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 


முன்னதாக, போட்டி இலங்கை அல்லது தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்படலாம் என்று ஊகங்கள் எழுந்த போதும், அணிகளின் உரிமையாளர்கள் இந்தியாவில் நடத்துவதையே விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version