Aivarree

INDvsWI / விராட் கோலி விலகினார் / காரணம் சொல்லப்படவில்லை

விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது 20/20 போட்டியில் பங்கேற்க மாட்டார்.

அவர் சனிக்கிழமை காலை கொல்கத்தாவை விட்டு வெளியேறினார் என்றும், ஞாயிற்றுக்கிழமை ஈடன் கார்டனில் நடைபெறும் இறுதி 20/20 போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும் BCCI வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் ரிஷப் பான்ட் உம் விளையாட மாட்டார் என அறியக்கிடைக்கிறது.

வெள்ளியன்று நடந்த இரண்டாவது 20/20 போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இறுதி 20/20 போட்டியில் இஷான் கிஷன் விக்கட் காப்பாளராக செயற்படுவார்.

விளையாட்டு செய்திகளை மாத்திரம் பெற விரும்புகின்றவர்கள் கீழுள்ள வட்சப் குழுவில் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/JjPCpjHBxujC2i9YksGM94

Exit mobile version