Aivarree

INDvsSL | பத்தும் நிஷாங்க விளையாடுவதில் நிச்சயமில்லை.

இலங்கை மற்றும் இந்திய (INDvsSL) அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி சனிக்கிழமை ஆரம்பமாகிறது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஷாங்க விளையாடுவதில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக அவர் கிரிக்கட் விளையாடி வருவதன் காரணமாக அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் அவர் பயிற்சியிலும் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரை இந்த போட்டியில் (INDvsSL) இணைப்பதா? அல்லது ஓய்வளிப்பதா? என்பது குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும்.

டெய்லிமிரர்

Exit mobile version