tamilnewsline

இந்தியாவின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்

இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான முக்கிய பரீட்சைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்தன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்தத் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசின் தீர்மானத்துக்கு அமைய , மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

Exit mobile version