IMF என்ற சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் நிலையில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ரமேஷ்பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் IMF இடம் உதவி கோரப்பட்டுள்ளது.
இப்போதும் அந்த விடயத்தில் தயார் நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற இதர உதவி நிறுவனங்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துகிறது, என்றார்.
