இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ள சமயத்தில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (15) சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.
இதன்போது நாணய நிதியத்துடன் இணங்கி சில யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
