தீயணைப்பு அவசர இலக்கம் செயலிழப்பு: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

54 minutes ago
Sri Lanka
(2 views)
aivarree.com

தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பும் வரை, தீ விபத்துக்கள் மற்றும் அவசர நிலைமைகள் குறித்து பொதுமக்கள் 117 என்ற இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

பொதுமக்களால் வழங்கப்படும் அனைத்துத் தகவல்களும் உடனடியாக தீயணைப்பு சேவைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. விபத்துக்களின் போது தாமதமின்றி இந்த மாற்று இலக்கத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.