Aivarree

ETF-EPF வரி விதிப்பு / சுதந்திர கட்சி மேற்கொள்ளவுள்ள தீர்மானம்.

FILE PHOTO

ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பாக, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடி தீர்மானம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த கட்சியின் பிரசார செயலாளர் சாந்த பண்டாரவின் தகவல்படி, ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பனவற்றுக்கு இந்த வரியை அமுலாக்கும் விடயத்தில் அரசுடன் இணக்கப்பாடில்லை என்று தெரியவருகிறது.


வருடாந்தம் 2 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்ற செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த வரி பொருத்தமானது.


என்றாலும் கடுமையான உழைப்பின் மூலம் ஆக சேகரித்துள்ள தனியார் மற்றும் மித தனியார் நிறுவன பணியாளர்களின் சேமிப்பில் கை வைக்க அனுமதிக்க முடியாது.


இந்த யோசனை பாராளுமன்றத்துக்கு வரும் போது, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடி தீர்மானம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version