Aivarree

ETF, EPFக்கு 25% வரியா? – சட்ட மா அதிபரின் அறிவிப்பு

ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) என்பவற்றுக்கு வரி அறவிடும் முயற்சியாக மேலதிக வரி சட்டமூலம் நிதி அமைச்சினால் கொண்டவரப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இதனை அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தக்கலும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டமூலத்தில் இருந்து ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாபநிதியம் உள்ளிட்ட 13 நிதியங்கள் நீக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சட்டமூலம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிக தொகையை வருமானமாக பெறுகின்ற நிறுவனங்களுக்கும், நபர்களுக்கும் 25% வரி இதன் கீழ் அறவிடப்படும்.

Exit mobile version