tamilnewsline

அமெரிக்கா – ஈரான் இடையில் தீவிரமடையும் மோதல்: 90 இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா பாரிய தாக்குதல்!

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் மீண்டும் கடும் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஈரானின் 90 இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் இரண்டாவது தொடர் தாக்குதல் இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் தாக்குதல்களில், இதுவரை 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் தொடர்ச்சியாகப் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கட்டார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் இலக்கு வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version