ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் திடீரென விலகியுள்ளார்.
அவரது பதவி சம்பந்தமான இரகசிய கலந்துரையாடல் ஒன்று நேற்று(04) இடம்பெற்ற போது, அவர் தொடர்ந்தும் இந்த பதவியை வகிப்பார் என தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த கூட்டம் நடந்து 18 மணித்தியாலத்திற்கு பிறகு அவர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அவரது முகாமை நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரிலும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுடனான தொடரிலும் உப பயிற்றுவிப்பாளர் அன்றூவ் மெக்டொனால்ட் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தவுள்ளார்.
ஜஸ்ட்டின் லாங்கரிக் பதவி விலகலுக்கான காரணம் சொல்லப்படவில்லை.
