Aivarree

CEYPETCO எண்ணெய் விலை கூடுமா?

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் வகை விலையையும் அதிகரிக்க வலியுறுத்தப்படுகிறது.


சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) தமது எரிபொருள் விலைகளை திங்கட்கிழமை அதிகரித்தது.


அதற்கு நிகராக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் வகை விலையையும் அதிகரிக்க வேண்டும என்று அதன் தொழிற்சங்கள் வலியுறுத்துகின்றன.


எனினும் விலை அதிகரிப்புக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Exit mobile version