பேருந்து கட்டண திருத்தம் கொள்கைக்கு முரணானது: கெமுனு விஜேரத்ன சாடல்!

11 hours ago
Sri Lanka
(6 views)
aivarree.com

பேருந்து கட்டண திருத்தம் கொள்கைக்கு முரணானது: கெமுனு விஜேரத்ன சாடல்!

வருடாந்த பேருந்து கட்டண திருத்தமானது, கட்டணக் கொள்கையை முற்றாக சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்கம் நியாயமான மற்றும் நிலையான முறையில் கட்டணங்களை ஒழுங்குபடுத்தத் தவறிவிட்டதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் குறுகிய தூர சேவைகளிலும், சுமார் 3,000 பேருந்துகள் நீண்ட தூர சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு சேவைகளுக்கும் வெவ்வேறு கட்டணக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது பயணிகளுக்குத் தேவையற்ற சுமையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

அடுத்தடுத்த மாதங்களில் டீசல் விலை தொடர்ந்து குறைந்தால், குறுகிய தூர சேவைகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள 12 சதவீத கட்டண அதிகரிப்புக்கு என்ன நடக்கும்? எரிபொருள் விலை மேலும் குறைக்கப்பட்டாலும், இந்த புதிய முறையின் கீழ் குறுகிய தூர சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைப்பது சாத்தியமற்றதாகிவிடும் எனக் குறிப்பிட்டார்.