ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் (ஆரம்பக்கட்டணம்) 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பேருந்து கட்டணங்கள் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன:
39.00 ரூபாவாக இருந்த கட்டணம் 44.00 ரூபாய்
50.00 ரூபாவாக இருந்த கட்டணம் 56.00 ரூபாய்
101.00 ரூபாவாக இருந்த கட்டணம் 115.00 ரூபாய்
505.00 ரூபாவாக இருந்த கட்டணம் 582.00 ரூபாய்
2422.00 ரூபாவாக இருந்த கட்டணம் 2902.00 ரூபாய்
திருத்தப்பட்ட முழுமையான பேருந்து கட்டண விபரப் பட்டியலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
