பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை – LPL தொடரில் விளையாடமாட்டார்!

4 hours ago
SPORTS
(7 views)
aivarree.com

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க லண்டனில் மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது மேலாளர் அசங்க விஜேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று லண்டனின் சாரும் ரோட் வைத்தியசாலையில் (Sarum Road Hospital) மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

அறுவை சிகிச்சையினை தொடர்ந்து அவர் குணமடைவதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அடுத்ததாக நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்குள் அவர் பூரண குணமடைந்து அணியில் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தும் நிஸ்ஸங்கவின் சிகிச்சை மற்றும் குணமடையும் காலப்பகுதியில் அவருடன் லண்டனில் தங்கியிருந்து கண்காணிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவர் தமிந்த அத்தநாயக்க உடன் சென்றுள்ளார்.