Aivarree

BA2/ ஒமிக்ரொனின் சக்திவாய்ந்த உருமாற்றம் / ஜப்பானில் கண்டுபிடிப்பு

ஓமிக்ரொன் கொரோனா வைரஸின் கிளையினமான BA2 வைரஸ் திரிபு மிக வேகமாகப் பரவாவிட்டாலும், அது மிகவும் தீவிரமான நோய் நிலைமையை உண்டாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரிபு கோவிட்-19 க்கு எதிராக தற்போது இருக்கும் சில தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைமைகளைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், இந்த சமீபத்திய BA.2, டெல்டா போன்ற தீவிரத்தன்மை கொண்டது என்பறு உறுதியாகியுள்ளது.

இந்த திரிபு, இரண்டு தடுப்பூசிகள் மூலம் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

Exit mobile version