tamilnewsline

அஸ்வெசும’ கொடுப்பனவு: 70 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு நாளை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவுகள் நாளை (03) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களே இந்த நிதியுதவியைப் பெறவுள்ளனர்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் மொத்தம் 697,900 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த நிதி நாளை நேரடியாக அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version