tamilnewsline

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான 2026 இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 2026ஆம் ஆண்டின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, ஆசிரியர்கள் http://nstt.moe.gov.lk என்ற இணையதளம் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஜூலை 16ஆம் திகதி முதல் ஜூலை 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை, சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் 2026 ஜூலை 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி அமைச்சுக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version