tamilnewsline

2026 உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களுக்கான இறுதி திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பரீட்சார்த்திகள், ஓகஸ்ட் 3ஆம் திகதி நள்ளிரவு வரை அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த திகதிக்கு பின்னர் எவ்வித கால நீட்டிப்பும் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, அனுமதி அட்டைகளில் பெயர், பாடங்கள், பரீட்சை நிலையம் உள்ளிட்ட விபரங்களில் பிழைகள் உள்ள பரீட்சார்த்திகள், குறித்த திகதிக்குள் அவற்றைத் திருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version